×

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மேலூர், அக். 25: கொட்டாம்பட்டி அருகே விறகு ஏற்றி சென்ற லாரி தாழ்வாக சென்ற மின்வயரில் உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் கொட்டாம்பட்டி பகுதியில் விறகுகளை விலைக்கு வாங்கி லாரியில் ஏற்றினர். இதில் மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்த தொழிலாளி சோலைமலை மகன் அழகர்சாமி(30) என்பவரும் வேலை பார்த்தார். விறகுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு நாகமங்கலத்தில் இருந்து பொட்டப்பட்டி செல்லும் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.வழியில் உயர் அழுத்த மின்வயர் தாழ்வாக செல்ல, லாரியின் பின்புறம் இருந்த அழகர்சாமி ஒரு கம்பால் அந்த மின்வயரை தூக்கி ஒதுக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மின்வயர் இவர் மீது உரசி உள்ளது. இதில் மின்சாரம் தாக்கி அழகர்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த அழகர்சாமி தேமுதிக கிளை கழக உறுப்பினராக உள்ளார். இச்சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மொபட் மோதி தொழிலாளி பலி