×

தீபாவளி இனாம் கேட்டால் புகார் அளிக்கலாம் தீயணைப்பு அதிகாரி தகவல்

மதுரை, அக்.25: தீபாவளிக்காக தீயணைப்பு வீரர் இனாம் கேட்டால், இதுகுறித்து புகார் அளிக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி கல்யாணக்குமார் கூறியதாவது; மதுரை மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வண்டிகள், வீரர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது தீவிபத்து ஏற்பட்டால் உடனே 101 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். கடந்த ஒரு மாதமாக மதுரையில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு பாடங்களை நடத்தி வருகிறோம்.அதற்கு நல்ல பலன் கிடைத்தது. பட்டாசு வெடிக்கும் போது பருத்தியிலான ஆடை அணிந்திருக்க வேண்டும். அருகிலேயே எப்போது வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்க வேண்டும். குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. திறந்த வெளி மைதானத்தில் பட்டாசு வெடித்தால் பாதுகாப்பானது. திரியை பற்ற வைப்பதற்கு நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்த வேண்டும். புஸ்வானம் வைக்கும் போது அதற்கு நேராக முகத்தை வைக்கக் கூடாது. தள்ளி நின்று பற்ற வைக்க ேவண்டும். அதே சமயம் தீயணைப்பு வீரர்கள், தனியார் நிறுவனங்களுக்கு சென்று இனாம் வாங்கினால் உடனே பொது மக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்து ‘94450 86206’ என்ற மொபைல் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்தா

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை