×

வாகனங்களை சேதப்படுத்தும் குண்டும் குழியுமான சாலை

மதுரை, அக். 25: மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் அண்ணாநகர், கே.கே.நகர், வண்டியூர், மேலமடை, ஆவின் நகர், கோமதிபுரம், ஜெய்ஹிந்துபுரம் உள்பட நகர் முழுவதும் பல இடங்களில் ரோடுகள் குண்டும், குழியுமாக ஆகி விட்டது. லேக் ஏரியா ரோடு, சொல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.இதனால் சாலையில் செல்லும் டூவீலர் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். டூவீலரும் அடிக்கடி பஞ்சர் ஆகி விடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pit road ,
× RELATED பெசன்ட் நகரில் உள்ள நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்