×

மழை தந்த பசுமை வறண்டு கிடக்கும் வதிலை கண்மாய்கள் மஞ்சளாறு அணையை திறந்து விட வேண்டும்

வத்தலக்குண்டு, அக். 25: வத்தலக்குண்டு பகுதி கண்மாய்களை நிரப்ப மஞ்சளாறு அணை தண்ணீரை திறந்து விட வேண்டும் என தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு அவசர கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகிக்க, மாநில பொருளாளர் சரவணன், சட்ட ஆலோசகர் பழனிக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வத்தலக்குண்டு பகுதியில் கட்டக்காமன்பட்டி, வீரன்குளம், பழையவத்தலக்குண்டு பெரியகண்மாய், வேடன்குளம், வெங்கிடாஸ்திரிகோட்டைசிறுவன்குளம் என அனைத்து கண்மாய்களும் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். அதேநேரத்தில் பழைய ஆயக்கட்டு பகுதியான வத்தலக்குண்டு பகுதிக்காகவேகட்டப்பட்ட மஞ்சளாறு அணையின் மொத்த கொள்ளளவு 57 அடியில் 53 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தண்ணீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் இன்னும் சில நாட்களில் அணை நிரம்பும் வாய்ப்பிருக்கிறது. எனவே பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி மஞ்சளாறு அணையை திறந்து விட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் விவசாயிகள் பொன்னம்பலம், மொக்கராசு, போஸ், ரமேஷ், வக்கீல் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில இளைஞரணி செயலாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.

Tags : Manchal Dam ,
× RELATED சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்ற வேண்டும்: மக்கள் கோரிக்கை