நத்தத்தில் மருத்துவ முகாம்

நத்தம், அக். 25: நத்தம் யூனியன் அலுவலக வளாகத்தில் சத்துணவு பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்களுக்கு சமூக நலத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வராஜன் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். யூனியன் ஆணையாளர் முனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மணிமுத்து முன்னிலை வகித்தனர். உலுப்பகுடி வட்டார மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் வேல்விழி மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சையளித்தார். முகாமில் சுமார் 120 பேருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் சத்துணவு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் மற்றும் வட்டார மருத்துவமனை செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். சத்துணவு அமைப்பாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

Tags : camp ,Natham ,
× RELATED நல்லியாம்பாளையம் பகுதியில் நாளை இலவச மருத்துவ முகாம்