×

தீபாவளி வியாபாரம் களை கட்டியது மாநகரில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சேலம், அக்.25: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், சங்ககிரி, இடைப்பாடி, ஓமலூர் மற்றும் மேட்டூர் ஆகிய இடங்களில் உள்ள கடைவீதிக்கு காலை முதல் கூட்டம் அலைமோதுகிறது. கிராமப்பகுதிகளில் இருந்து வரும் மக்களால், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.   அதிகரிக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், குற்றம் நடைபெறுவதை தடுக்கவும் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையத்தில் உள்ள முக்கிய வீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து உட்கோட்டங்களிலும் குற்றம் நடைபெறுவதை தடுக்க குற்ற தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு சங்ககிரி, இடைப்பாடி, ஆத்தூர், தம்மம்ப்பட்டி, தலைவாசல், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி மற்றும் வாழப்பாடி ஆகிய பஸ் ஸ்டாண்டிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருட்டு, ஜேப்படி குற்றங்களை தடுக்க மப்டி போலீசாரும் ரோந்து வருகின்றனர். சேலம் டவுன், முதல் அக்ரஹாரம், 2வது அக்ரஹாரம், சின்னக்கடை வீதி, அருணாசல தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. சேலம் குகை ரோடு, சூரமங்கலம், செவ்வாய்பேட்டை மார்க்கெட் கடைகளிலும் ஓரளவு கூட்டம் உள்ளது. திருட்டு குறித்து மைக் மூலம் தொடர்ந்து போலீசார் எச்சரித்து வருகின்றனர். கண்காணிப்பு காமராக்கள் மூலம் மக்களின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், குற்றப்பிரிவு போலீசார் மப்டியிலும் வீதிகளில் ரோந்து வருகின்றனர். மாநகரில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags : city ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...