×

சேலத்தில் சிவகாசி பட்டாசு பஜார்பல்வேறு ரகங்களில் விற்பனைக்கு குவிப்பு

சேலம், அக்.25: சேலத்தில், சிவகாசி பட்டாசு பஜார் விற்பனை அங்காடிகளில் பல்வேறு ரகங்களில் பட்டாசுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாநகரில் முதல் முறையாக புத்தம் புதுவகை பட்டாசுகள் சிவகாசியில் இருந்து நேரடியாக தருவிக்கப்பட்டு விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. சேலம் சாரதா கல்லூரி ரோடு சண்முகா மருத்துவமனை எதிரிலும், சேலம் தேர்வீதி ராஜகணபதி கோயில் அருகிலும், ஓமலூர் சாலையில் நடராஜ் செட்டியார் திருமண மண்டப வளாகம் அருகிலும், அழகாபுரம் காவல்நிலையம் அருகே 2வது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் ரவிசங்கர் திருமண மண்டபம் அருகிலும், சீலநாயக்கன்பட்டியில் சிவசக்தி முருகன் கோயில் மண்டபம் அருகிலும் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேட்டூர் அணை பகுதியில் சிவகாமி சுந்தரி திருமண மண்டபம் அருகிலும், மல்லூர் அகரமகால் திருமண மண்டபம் அருகிலும், ஆத்தூர் விநாயகாபுரம் பாக்கியா திருமண மஹால் அருகிலும் சிவகாசி பட்டாசு பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு சைனா பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. ₹500க்கு மேல் பட்டாசு வாங்குவோருக்கு 2020ம் ஆண்டின் அழகிய காலண்டர் இலவசம். ₹1000க்கு மேல் வாங்குவோருக்கு அத்திவரதர் சாமி போட்டோ பிரேம் இலவசம். ₹1500 மேல் வாங்குவோருக்கு இரண்டும் இலவசம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த பட்டாசு பஜாரில் சங்கு சக்கரம், பூச்சட்டி வகைகள், சாட்டை, பிஜிலி மற்றும் லட்சுமி வெடிகள், அணுகுண்டுகள், சிறிய சரவகைகள், ராக்கெட் வகைகள், சிறிய பேன்ஸி 2019 என உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் உள்ளது.

Tags : Sivakasi Fireworks Bazaar ,Salem ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!