பிரபல ரவுடி கைது

சேலம், அக்.25: சேலம் கிச்சிபாளையம் காளிகவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு என்கிற மொட்டையன்(29). பிரபல ரவுடியான இவர் மீது, ஓசூரில் நடந்த கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியை சேர்ந்த வடிவேல் என்பவரை மிரட்டி, தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், மொட்டையனை கிச்சிபாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளியான மணி என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>