×

கொள்ளிடம் அருகே குடியிருப்பு பகுதிக்கு செல்ல சாலை வசதி அமைத்து தர கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கடந்த 1978ஆம் ஆண்டு 54 பேருக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 15 பேர் மட்டுமே வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். மற்ற வீட்டு மனைகளுக்கு சொந்தக்காரர்கள் அங்கு வீடு கட்டி இதுவரை குடியேற முன்வரவில்லை. அந்தப் பகுதியில் இதுவரை மின் வசதி மற்றும் சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு சென்றுவர இதுவரை சாலை அமைக்கவில்லை.உரிய சாலை வசதி மற்றும் மின் வசதி இதுவரை அமைத்து தராததால் தற்போது அங்கு குடியிருப்பவர்கள் சிரமத்துடன் இருந்து வருகின்றனர். மழைக்காலங்களில் அங்கிருந்து வெளிப்பகுதிகளுக்கு வந்து செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். அந்த பகுதிக்கு சாலை அமைக்க கோரி அங்குள்ளவர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அங்குள்ளவர்களின் நலன்கருதி தொடர்ந்து அங்கு வீடு கட்டி வசிக்கும் வகையில் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து அவர் கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் கொள்ளிடம் சமூக ஆர்வலர் காமராஜ் தெரிவித்தார்….

The post கொள்ளிடம் அருகே குடியிருப்பு பகுதிக்கு செல்ல சாலை வசதி அமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mayiladududurra District ,Kuttham ,Naduvelur Village ,Dinakaran ,
× RELATED குத்தாலம் அருகே கண்டியூரில் வடிவுடையம்மன் கோயிலில் பால்குட விழா