×

மாநில அளவிலான யோகா, கராத்தே போட்டி ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை

பரமத்திவேலூர், அக்.25: அசிகரா கராத்தே இன்டர்நேஷனல் நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டி, கரூர் எம்.குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் கரூர், ஈரோடு, ஊட்டி, சேலம், நாமக்கல், தர்மபுரி  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  குமிட்டி பிரிவில் ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள், மோகன்ராஜ், நரேஷ், தரணி ஆகியோர் தங்கப்பதக்கம், விஷால், ரோகித் ஆகியோர் வெள்ளிப் பதக்கம், முரளிதரன், ஹரினீஷ், வைதீஸ்வரன், சுகந்த், ஹேமந்த் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். மேலும், கட்டா பிரிவில் ஹேமந்த் தங்கப்பதக்கம், மோகன்ராஜ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

சேலம் டாக்டர் விஜயராகவாச்சாரியார் மெமோரியல் அரங்கில், மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் பிரதீப், வர்ஷிகா, தீப்திகா,  தருணிகா, மகிந்தா, சரண், லோகேஷ்வர், மனிஷா, சோபிகா, ரோகித், சமிசா, விஷ்ணு ப்ரீத்தா, ஸ்வேதா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் தங்கப்பதக்கம்,  தருண்ராஜ், சாதனா, தான்யலட்சுமி, கர்னிஷ்கா மற்றும் கார்த்திகா ஆகியோர் வெள்ளிப்பதக்கம், கனிகாஸ்ரீ,  ஜனனிஸ்ரீ, ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். மாநில அளவிலான போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத்தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் டாக்டர் அருள், சேகர், சம்பூரணம் மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : Karate Competition RN ,Oxford School Students Achievement ,
× RELATED சாலை பாதுகாப்பு வாரவிழா போட்டியில்...