சேந்தமங்கலம் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை சரிவு

சேந்தமங்கலம், அக்.24: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பேளுக்குறிச்சி, சிங்களாந்தபுரம், கல்குறிச்சி, வெள்ளாளப்பட்டி, திருமலைப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதியில், அதிகளவில் மரவள்ளிகிழங்கு பயிரிடப்பட்டள்ளது. இப்பகுதியில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி செல்லப்பம்பட்டி, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள சேகோ பேக்டரிகளுக்கு, ஜவ்வரிசி தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர். ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிகிழங்கின் மாவு சத்தை புள்ளியல் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் டன் 10 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ₹1500 விலை குறைந்து ₹8,500 என விற்பனையாகிறது. தொடர்மழை காரணமாக விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Stories:

More
>