வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

கிருஷ்ணகிரி, அக்.25:   கிருஷ்ணகிரியில் உள்ள டி.கே.சாமி மேல்நிலைப்பள்ளியில், வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மேகலா பிராங்களின் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், தொடுத்திறன், தனித்திறன் என 2 வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் 316 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டியின் பொறுப்பாளராக உடற்கல்வி ஆசிரியர் பவுன்ராஜ் இருந்தார். போட்டியின் நடுவர்களாக குப்பாக-வுண்டர், கனிமொழி, மேரி பரிமளம், லட்சுமி, கிருஷ்ணராஜ், குருராகவேந்தர், சூர்யா, பாலசுப்பிரமணி, பவித்ராமன் ஆகியோர் செயல்பட்டனர். இப்போட்டிகளில் அரசு பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கெலமங்கலம் அருகே ராகி, நெல் வயல்களை நாசம் செய்த யானை கூட்டம்