×

வேப்பனஹள்ளியில் உயர்கோபுர மின்விளக்கு திறப்பு

வேப்பனஹள்ளி, அக்.25:  வேப்பனஹள்ளியில் உயர்மின் கோபுர விளக்குகளை எம்எல்ஏ முருகன் திறந்து வைத்தார். வேப்பனஹள்ளியில் காந்தி சிலை மற்றும் குப்பம் சாலை இரவு நேரத்தில் மின்விளக்கு வசதியின்றி, மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். கும்மிருட்டு காரணமாக திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டினர். எனவே, அப்பகுதியில் உயர்மின் கோபுரம் அமைத்து ஒளி வெள்ளத்தை பாய்ச்ச வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இததனை ஏற்று வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ ₹5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியை கொண்டு தலா ₹2.5 லட்சம் மதிப்பில் இரு இடங்களிலும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனை முருகன் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரகுநாத், கலீல், கௌரிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Opening Ceremony ,Veppanahalli ,
× RELATED பிரதிஷ்டை தின பூஜை சபரிமலையில் நடை திறப்பு