×

காவேரிப்பட்டணத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி

காவேரிப்பட்டணம், அக்.25: காவேரிப்பட்டணம் ஒன்றியம் மிட்டஅள்ளி, எர்ர அள்ளி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளையொட்டி, இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து இப்பேரணியை நடத்தியது. இப்பேரணியை சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காவேரிப்பட்டணம்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, வேடியப்பன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தூய்மை இயக்கம் சார்பில்  விழிப்புணர்வு கருத்துப்படங்கள் மற்றும் குறும்பட காட்சிகள் காண்பிக்கப்பட்டது.

மேலும், நிதிசார் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிராம், மருத்துவர் சோமசுந்தரம், தமிழ்நாடு கிராம வங்கி நிதிசார் ஆலோசகர் முருகன், வட்டார சுகாதார ஆய்வாளர் அருள், ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் செந்தில், உதவி மருத்துவர் செல்வம், ஊராட்சி செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கள விளம்பர அலுவலர் வீரமணி வரவேற்றுப் பேசினார். சுகாதார ஆய்வாளர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.

Tags : Awareness rally ,town ,Kaveri ,
× RELATED ஊருக்கு ஒன்றாக ஊரைக் காத்த பிடாரி