×

மெணசியில் ஊராட்சி அலுவலகத்தை ஆக்கிரமிக்கும் குடிமகன்கள்

பாப்பிரெட்டிப்பட்டி,  அக்.25: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி ஊராட்சி மன்ற அலுவலகத்தை, இரவு  நேரத்தில் ஆக்கிரமிக்கும் குடிமகன்கள், காலி மதுபாட்டில், உணவு கழிவுகளை  போட்டுச்செல்வதால் பொதுமக்கள் அதிருப்தியடைகின்றனர்.பாப்பிரெட்டிப்பட்டி  அருகே உள்ள மெணசி ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து  வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலத்தை, இரவு நேரத்தில் சமூக  விரோதிகள் ஆக்கிரமித்து கூட்டமாக மது  அருந்துகின்றனர். போதையில் வாக்குவாதம்  செய்வதுடன், அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கின்றனர். இதனால் அருகில் உள்ள  வீடுகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும், காலி மதுபாட்டில்களை உடைத்து வீசிச்செல்கின்றனர். இதனால்  மறுநாள் அலுவலகத்துக்கு வருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஊராட்சி மன்ற  அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Citizens ,Panchayat Office ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...