×

கொத்தட்டை கிராமத்தில் மழைநீரில் நின்று பொதுமக்கள் போராட்டம்

பெண்ணாடம், அக். 25: தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கிராமமக்கள் அவதியடைந்துள்ளனர். பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட புதிய காலனி மற்றும் பழைய காலனியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நான்கு வீதிகளிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலைகள் அனைத்தும் பெரும் அளவில் சேதமடைந்து உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில் இந்த கிராமத்தில் முழுமையாக வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் அனைத்து வீதிகளிலும் குளம்போல் தேங்கி நிற்கிறது. வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தெருக்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி, மழைநீரில் நின்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் இப்பகுதி யை நேரில் பார்வையிட்டு கொத்தட்டை ஊராட்சி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Civil Strike ,village ,Kotte ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...