×

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி

பண்ருட்டி, அக். 25: பண்ருட்டி தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் அரசு பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி பேருந்து நிலையத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்எஸ்எஸ் மாணவர்கள் மூலம் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி, பொதுமக்களிடையே பேசும்போது, தரமான நிறுவன பட்டாசுகள் மற்றும் மத்தாப்புகளை வாங்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெடிகளை வெடிக்க நீண்ட வத்திகளை பயன்படுத்த வேண்டும். பெரியவர்கள் இல்லாமல் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். பின்னர் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மூலம் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகன்குமார் செய்து இருந்தார்.

Tags : Accident Diwali Awareness Rally ,
× RELATED இவ்வாறு அவர் கூறினார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்