×

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்பு துறை செயல்விளக்கம்

சின்னசேலம், அக். 25: சின்னசேலம் பகுதியில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பட்டாசு வெடிக்கும் முறை குறித்து தீயணைப்பு துறையினர் பஸ் நிலையம், அரசு பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கு சின்னசேலம் தீயணைப்பு நிலைய (பொ) அலுவலர் பழனிவேல் தலைமை தாங்கினார். அப்போது தீயணைப்பு வீரர்கள் முத்து, ஆனந்தகுமார், ஷாஜகான், கதிர், சிவா மற்றும் பணியாளர்கள் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் பொதுஇடங்களில் பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கத்துடன் செய்து காட்டினார்கள். கூரைவீடு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேங்ணடும். தீவிபத்து ஏற்பட்டால் அதை எப்படி எளியமுறைகளை கையாண்டு தீயை அணைப்பது என்பது குறித்தும் செய்து காட்டினார்கள். மேலும் பொதுமக்கள், மாணவர்களிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

Tags : Fire Department ,celebration ,
× RELATED தீயணைப்புத்துறை இயக்குனர் பேட்டி:...