×

காமராஜர் நகரில் காங்., அமோக வெற்றி

புதுச்சேரி, அக். 25: புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அமோக வெற்றிபெற்றார். இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதன்மூலம் இத்தொகுதியை 3வது முறையாக காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.  புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த வைத்திலிங்கம் எம்பி ஆனதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு கடந்த 21ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்ஆர் காங்கிரசில் புவனா என்ற புவனேஸ்வரன் உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மொத்தமுள்ள 35 ஆயிரத்து 9 வாக்காளர்களில் 24 ஆயிரத்து 310 பேர் வாக்குரிமை செலுத்தியிருந்தனர். மொத்தம் 69.44 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குபதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் 3 அடுக்கு பாதுகாப்பு சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்ததால் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.

 இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் தேர்தல் துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள், பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு போடப்பட்டிருந்த 11 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. 3 சுற்றுகளாக வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இத்தொகுதியில் உள்ள 3 தபால் வாக்குகளும் பதிவாகவில்லை. இதனால் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றன. அது முடிந்ததும் விவிபாட்டில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முதல்சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

 முதல்சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 1,937 வாக்குகள் முன்னணியில் இருந்தார். அவருக்கு 4,029 வாக்குகள் கிடைத்தன. என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனாவுக்கு 2,092 வாக்குகள் கிடைத்திருந்தது. இரண்டாவது சுற்றிலும் ஜான்குமார் முன்னிலை பெற்றார். வாக்குவித்தியாசம் 3,730 ஆக உயர்ந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் 3வது சுற்றும் எண்ணி முடிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றார். என்ஆர் காங்கிரஸ் புவனாவுக்கு 7,611 வாக்குகள் கிடைத்தன.வாக்கு வித்தியாசம் 7,170 ஆக உயர்ந்தது: குறைந்த வாக்காளர்கள் மட்டுமின்றி வாக்குபதிவு சதவீதமும் இத்தேர்தலில் குறைந்ததால் 8 மணிக்கு தொடங்கிய வாக்குஎண்ணும் பணி ஒரு மணிநேரத்தில் முடிவுற்றது. இதையடுத்து காமராஜர் நகரில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஜான்குமாருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான முகமது மன்சூர் வழங்கினார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியில் திரண்டிருந்த காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரிகள் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும்,

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...