×

மனநலம் பாதித்த முதியவர் மர்ம சாவு

வில்லியனூர், அக். 25:    வில்லியனூர் அருகே உள்ள மேல் திருக்காஞ்சி சுப்ரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (58). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே செல்வதும், அவரை உறவினர்கள் தேடி சென்று மீண்டும் வீட்டிற்கு கொண்டு வருவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சண்முகம் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. பிறகு அவரது மகன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றின் கரையோரம் நின்றுகொண்டிருந்ததாக சிலர் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது சண்முகம் ஆற்றில் பிணமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரது மகன் மகேந்திரன் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,
× RELATED கிணற்றில் முழ்கி சிறுவன் சாவு