×

அரவக்குறிச்சி அருகே பரிதாபம் சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்து வாலிபர் பலி

அரவக்குறிச்சி, அக். 25: அரவக்குறிச்சி அருகே வேடசந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு கரூர் கோடங்கி பட்டிக்கு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி எதிர் திசை சாலையில் கார் கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார். கரூர் அருகே கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் குமார்(34). இவரது தம்பி ஜெயகிருஷ்ணன்(30). இருவரும் காரில் வேடசந்தூரில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

கோயிலுக்கு சென்று விட்டு இருவரும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை குமார் ஓட்டினார். கார் அரவக்குறிச்சி அருகே திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் கணக்குப் பிள்ளைபுதூர் பிரிவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி எதிர் திசை சாலையில் தலை கீழாக கவிழ்த்தது. இதில் படுகாயமடைந்த குமார் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொன்டு செல்லும் வழியில் இறந்தார். தம்பி ஜெயகிருஷ்ணன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாகன விபத்தில் தனியார் ஊழியர் பலி