கரூர் ஜவகர் பஜாரில் சிசி டிவி மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி

கரூர், அக். 25: தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் ஜவகர்கடைவீதியில் மக்கள்கூட்டம் அலைமோதுகிறது. போலீசார் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தரைகடைகள் அமைக்கப்பட்டுள்ளது. துணிவகைகள், பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் இங்கு கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் ஆம்புலன்ஸ், காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்குவதால் நேற்று கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்காலிக கடை அமைத்துள்ள மைதானத்திலும் அதிக மக்கள் வந்து சென்றனர். இன்றும், நாளையும் மேலும் அதிக அளவில் வருவார்கள் என்பதால் மக்கள் எளிதில் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி நெரிசலில் திருட்டு சம்பவங்களை தடுக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. கரூர் ஜவகர் கடைவீதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து போலீசார் கண்காணித்து வாக்கி டாக்கியுடன் தகவல்களை தெரிவிப்பார்கள். மேலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கரூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கணினி, டிவி உதவியுடன் இங்கு கண்காணிப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுகின்றனர். நகரின் முக்கிய இடங்களிலும், சந்திப்புகளிலும் போலீசாரும், சீருடை அணியாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 4 கண்காணிப்பு கோபுரங்கள், 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>