×

புன்னம் சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி துவக்கம்

க.பரமத்தி, அக். 25: சத்திரம் நடுநிலைப்பள்ளியில் பயிலும் 25 மாணவிகளுக்கு அரசு சார்பில் தற்காப்பு கலை பயிற்சி தொடங்கியது. க.பரமத்தி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட புன்னம் ஊராட்சி சத்திரம் கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6, 7, 8ம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு அரசு சார்பில் 3மாத கால தற்காப்பு கலை பயிற்சி கற்று கொடுக்கப்பட உள்ளது. சத்திரம் நடுநிலைப்பள்ளியில் 25மாணவிகளுக்கு நடந்த பயிற்சி தொடக்க விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை பரமேஸ்வரி வரவேற்றார்.

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் கவிதா முன்னிலை வகித்தார். மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் மார்க்கண்டேயன் தலைமை வகித்து பள்ளி மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். கராத்தே பயிற்சியாளர் ராமசாமி உள்பட பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிறைவாக பள்ளி பட்டதாரி ஆசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Tags : Commencement ,Panchayat Union Middle School ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...