×

நாகை அருகே தனியார் பவர் பிளாண்ட் ஊழியர்கள் போனஸ் கேட்டு கலெக்டரிடம் மனு

நாகை, அக்.25: நாகை அருகே தனியார் பவர் பிளாண்ட் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி தொழிலாளர்கள் கலெக்டர் பிரவீன் பி நாயரிடம் மனு கொடுத்தனர். நாகை அருகே தனியார் பவர் பிளாண்ட் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் பிரவீன் பி நாயரை சந்தித்து மனு கொடுத்தனர். இதில் நாகை அருகே தனியார் பவர் பிளாண்ட் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கிப்ட் இதுவரை நிர்வாகம் சார்பில் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த 18ம் தேதி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் 22ம் தேதி குடுத்பத்தோடு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது கீழ்வேளூர் தாசில்தார் நாகூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அன்றைய தினம் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மறுநாள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி செய்தோம். அப்போது போலீசார் கேட்டுகொண்டதன் பேரில் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் இதுவரை போனஸ் தொடர்பாக எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு போனஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கோரி மனு;குத்தாலம் முன்னாள் எம்எல்ஏ கல்யாணம் தலைமையில் கலெக்டர் பிரவீன் பி நாயரை சந்தித்து நேற்று பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதில் நாகை மாவட்டத்திற்கு அரசு அறிவித்துள்ள மருத்துக்கல்லூரி ஒரத்தூரில் அமைய மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. நோயாளிகள் மிக குறைந்த தூரத்தில் மிக குறைந்த நேரத்தில் மருத்துவ வசதி பெரும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட நல்ல திட்டமாகும். எனவே மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைய பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Power Plant Employees ,Naga ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...