×

சீர்காழியில் புதர் மண்டி கிடக்கும் பிடிஓ அலுவலக சாலை

சீர்காழி, அக்.25:சீர்காழியில் புதர் மண்டி கிடக்கும் பிடிஓ அலுவலக சாலையில் பாம்புகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பத்திரபதிவு அலுவலகம், இ சேவை மையம், ஆதார் சேவை மையம், பொதுப்பணித்துறை அலுவலகம், கிளை சிறைச்சாலை ஆகியவை அமைந்துள்ளது. இந்த அலுவலர்களுக்கு தினந்தோறும் 500க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றன. இந்த அலுவலங்களுக்கு செல்லும் சாலையில் இருபுறங்களிலும் புதர்கள் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் இரு புறங்களிலும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் மலம் கழிவு நீர் கழிக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.

இரவு நேரங்களில் இந்த சாலையில் சரிவர மின் விளக்குகள் எரியாததால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றன. சாலையின் இருபுறங்களிலும் புதர்கள் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் வசிக்கும் இடமாக மாறி சாலைகளில் அதிகளவில் பாம்புகள் நடமாடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன் கருதி சாலையின் இருபுறங்களிலும் உள்ள புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : PDO ,office road ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்