×

பாம்புகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்

நாகை, அக்.25: நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகளை கலெக்டர் பிரவீன் பி நாயர் தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வட கிழக்குப் பருவமழை காலங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் தொடர்பான தூய்மை பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், கொசு உற்பத்தியினை தடுத்தல் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 434 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் நேற்று தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அனைத்து அரசு அலுவலக வளாகங்களும் சுத்தம் மற்றும் சுகாதாரமாக பராமாரிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கும் தங்கள் வீடுகள், குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் தெருவோரங்களில் குப்பைகள் தேங்காமலும், தண்ணீர் தேங்காமலும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த இயலும்.

மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீரை சுத்தமாகவும், வீட்டில் அன்றாடம் உருவாகும் திடக்கழிவுகளை அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர்த்திட வேண்டும். மழைக்காலங்களில் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்குவதை தவிர்த்து, டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நகராட்சி களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் தடுப்பு பற்றி எடுத்துக்கூறும் அறிவுறைகளைக் கேட்டு பின்பற்றியும், துண்டு பிரசுரங்கள் மூலம் வழங்கப்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் தடுக்க வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பிரவீன் பி நாயர், கூடுதல் கலெக்டர் பிரசாந்த், டிஆர்ஓ இந்துமதி, தனித்துணை கலெக்டர் ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிச்சை மொய்தீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் ஒட்டு மொத்த து£ய்மை பணியை மேற்கொண்டனர்.

Tags : season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு