×

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால் புகார் தெரிவிக்கலாம்

நாகை, அக்.25: நுகர்பொருள் வாணிபக் கழகம் நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நடப்பு காரீப் மார்க்கெட்டிங் 2019-20ம் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குண்டான விலையை உயர்த்தி வழங்கப்படவுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் இதற்காக அரசு ஆணை வழங்கியுள்ளது. சன்னரகம் நெல்லிற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1835, மாநில அரசின் ஊக்கத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70 என்று மொத்த விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1905 ஆகும்.  பொது ரகம் நெல்லிற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1815, மாநில அரசின் ஊக்கத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50 மொத்த விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1865 ஆகும். நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் இயங்கிவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், மாலை 2.30 முதல் 6.30 மாலை மணி வரை செயல்படும்.

இந்த நேரத்தில் விவசாயிகள் தங்கள் சிட்டா அடங்கல் விவர நகலினை சமர்ப்பித்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள கருவியில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லினை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து அதற்குரிய தொகையினை தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளவும். இதற்கு வசதியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகலினையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அளிக்கவும். விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லிற்கு கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் எவ்வித தொகையும் வழங்க தேவையில்லை. நெல் கொள்முதலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். அல்லது 4365&-251843 என்ற தொலை பேசி எண்ணில் தெரிவிக்கலாம். அல்லது துணை மேலாளர்கள் நாகை 9843084370, மயிலாடுதுறை 9865984950 ஆகிய செல் எண்களில் விடுமுறை நாட்கள் தவிர காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : paddy procurement centers ,
× RELATED லத்தூர் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல்...