×

நாகையில் ஜனவரி 3ம்தேதி ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம்

நாகை, அக்.25: நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 13 ம் தேதி வரை ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 3 ம்தேதி முதல் 13ம் தேதி வரை ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய 14 மாவட்ட இளைஞர்களும், பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்கலாம். இளநிலை படை அலுவலர் பணிக்கு வரும் 29ம் தேதி வரையிலும், அவில்தார் வரும் 30ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

மற்றொரு முகாம் ஆந்திர மாநிலத்தில் காகுலம் விளையாட்டு மைதானத்தில் வரும் நவம்பர் 7 ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறும். இம்முகாமில் இதே 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். இந்த பணிக்கு நவம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை (www.joinindianarmy.nic.in) என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல் அறிய நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04365-253042) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Camp ,Army ,Naga ,
× RELATED மருத்துவ முகாம்