×

வந்தவாசியில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னெடுப்பு பயிற்சி வகுப்பு

வந்தவாசி, அக்.25: வந்தவாசி, தெள்ளார் ஒன்றியங்களை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2வது கட்ட முன்னெடுப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வந்தவாசி வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இணைந்து தேசிய அளவில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சி அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 4 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வந்தவாசி, தெள்ளார் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீனா தலைமை தாங்கினார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி (வந்தவாசி), ராஜகோபால்(தெள்ளார்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் உமாபிரியா, ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆறுமுகம், அரிகிருஷ்ணன், தினேஷ்பாபு, முருகன், கற்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டு சமூகத்திற்கு உரிய பண்புகளை வளர்த்தல், பாதுகாப்பு, ஆரோக்கியமான பள்ளிச்சூழலை உருவாக்குதல், தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், வந்தவாசி, தெள்ளார் ஒன்றியங்களை சேர்ந்த 162 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் தெள்ளார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் குணசேகரன் நன்றி கூறினார்

Tags : workshop ,government school teachers ,Vandavasi ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு