×

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கரூர், அக். 25: டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கரூர் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று கலெக்டர் அன்பழகன் துவக்கி வைத்தார். டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பயனற்ற பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படவேண்டும். அத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாணவர்களாகிய நீங்களும் உங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும். கரூர் மாவட்டம் டெங்கு இல்லாத மாவட்டம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

பேரணியில் நகராட்சி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டைமேடு நடுநிலைப்பள்ளி, செவிலியர் கல்லூரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திண்ணப்பா கார்னர், பேருந்து நிலையம், ஜவகர் கடைவீதி, வழியாக நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது. நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன், நகர்நல அலுவலர் பிரியா, ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா