×

தாமதமாக நடந்து வரும் குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து கடும் பாதிப்பு

கரூர், அக். 25: அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று சின்ன ஆண்டாங்கோயில் சாலையில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் பழைய பைபாஸ் சாலையில் இருந்து சின்ன ஆண்டாங்கோயில் பாதை செல்கிறது. மதுரை பைபாஸ் சாலை வரை செல்லும் இந்த சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்களும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இதன் காரணமாக, இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் போன்றவை சென்று வருகிறது.

இந்நிலையில் சாலையின் துவக்கத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்யும் நோக்கில், பாதையை மறைக்கும் வகையில் சுற்றிலும் தடுப்பு போடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பணிகள் முழுமையடையாத காரணத்தினால் பிற வாகனங்கள் இந்த சாலையை எளிதாக கடந்து செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே இந்த சாலைப்பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைந்து மேற்கொண்டு, வாகனங்கள எளிதாக சென்று வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக வாகன போக்குவரத்து நடைபெறும் என்பதால் இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு