×

மின் ஓய்வு பெற்றோர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, அக். 24: சிவகங்கை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். மின்வாரிய வைர விழாவிற்கு மின் ஊழியர்களுக்கு 3சதவீதம் வழங்கியது போன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் வழங்க வேண்டும். மின் வாரியத்தில் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றிய பணிக்காலத்தை பணிக்காலத்தோடு சேர்த்து ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும்.மின்வாரியத்தில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் போஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர் மாசிலாமணி முன்னிலை வகித்தனர். போராட்டத்தை விளக்கி மாநில செயலாளர் செல்வராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மாநில செயலாளர் உமாநாத், மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,
× RELATED திமுகவினர் ஆர்ப்பாட்டம்