×

சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு கால்வாயில் குறைவான நீர் திறப்பு விவசாயிகள் புகார்

சிவகங்கை, அக். 24: பெரியாறு நீரை பாசனமாக கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. பெரியார் பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு உரிய பங்கு நீர் வழங்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு மிகக்குறைவான அளவு நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு ஆக.29 முதல் பெரியாறு நீர் இருபோக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. அக்.9 முதல் ஒரு போக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 130 கன அடி நீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்படுவது குறித்து மேலூர் பிரிவு அதிகாரிகள் எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கடைமடை பகுதியான சோழபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் திறக்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேலூர் பிரிவில் சிவகங்கை மாவட்டத்திற்கு கட்டாணிபட்டி ஒன்று மற்றும் இரண்டு மற்றும் சீல்டு கால்வாயில் பெரியாறு நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் நேற்று இரவு சிவகங்கை மாவட்டம் வந்தடைந்தது. ஆனால் பெரயளவிற்கு மிகக்குறைவான நீர் திறந்துள்ளனர். பெரியாறு பாசன விவசாயிகள் கூறியதாவது: போராட்டத்திற்கு பின் மூன்று கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகக்குறைவாக 30 கன அடி நீர் திறந்துள்ளனர். இந்த நீர் கால்வாய்களில் உறிஞ்சியது போக, பள்ளங்களில் நிரம்பி பின்னர் கண்மாய்களுக்கு வருவதில் மிகத்தாமதம் ஏற்படும்.இந்த தாமத நாட்களுக்குள் நீர் திறப்பை நிறுத்தவும வாய்ப்புள்ளது. போராட்டம் நடத்தப்பட்டதால் பெயரளவில் இல்லாமல் உரிய பங்கீட்டு நீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லெஸ்சிஸ் கால்வாயிலும் நீர் திறக்க வேண்டும்’ என்றனர்.

Tags : canal ,district ,Sivaganga ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...