×

சிவகங்கையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை, அக். 24: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை(அக்.25) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.அதன் அடிப்படையில் நாளை காலை 10மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவன வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்த பணியாளர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம். வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு பயிற்சியின் போது உதவித்தொகை மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Placement camp ,Sivaganga ,
× RELATED சிவகங்கை: பாஜக கூட்டணி வேட்பாளர்...