×

வளர்ச்சி பணி அலுவலர்களுடன் எம்எல்ஏ ஆலோசனை

கம்பம், அக். 24: கம்பம் சட்டப்பேரவை தொகுதியில் அடங்கிய பேரூராட்சி பகுதிகளின் திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர்களுடன்  எம்எல்ஏ ஜக்கையன் ஆலோசனை நடத்தினார். கம்பம் எம்எல்ஏ அலுவலகத்தில் க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம், தேவாரம், ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ ஜக்கையன் கலந்து கொண்டு, நியாய விலை கடைகள் கட்டுதல், சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சாலைகள், தெருவிளக்குகள், கழிப்பறை பராமரித்தல் பற்றியும், புதியதாக நடைபெற இருக்கும் பணிகள் பற்றியும் பேசினார். செயல் அலுவலர்கள் ஏற்கனவே நடைபெற்ற திட்டப்பணிகள், நடைபெறப்போகும் திட்டப்பணிகள், தேவைப்படும் நிதிகள் குறித்து விளக்கினர்.

Tags : MLA consultation ,development work officers ,
× RELATED செக் மோசடி வழக்கில் மின்சார வாரிய...