×

தொண்டி பேரூராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி வாக்காளர்கள் அதிருப்தி

தொண்டி, அக். 24: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு தற்போது வெளியாகியுள்ள சீர்திருத்த வாக்காளர் பட்டியல் குளறுபடியாக, குழப்பமாக உள்ளதாகவும் மீண்டும் ஆய்வு செய்ஙது மறு பட்டியல் வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமீபத்தில் திருத்தபட்ட வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் தொண்டியில் உள்ள 15 வார்டுக்கும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படடுள்ளது. இதில் பொதுமக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஆலோசனையும் செய்யாமல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பிட்ட ஒரு தெருவில் வசிப்பவரின் வாக்கு மற்றொரு வார்டில் இருக்கிறது. கணவன் மனைவியை பிரித்து வெளியிட்டுள்ளனர்.குறிப்பிட்ட வார்ட்டில் இருப்பவருக்கு அங்கு வாக்கு இருந்தால்தானே அந்த வார்டுக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற முடியும். எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் வார்டு வரையறை செய்யப்பட்டதாக தெரிகிறது. வாக்காளர்கள் அதிகம் இருக்கும் வார்டுகளை வேண்டும் என்றே குறைத்துள்ளனர். இதனால் வார்டுகளில் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது. இதை சரி செய்ய அனைத்து பொது மக்களின் ஆலோசனையின் படி மீண்டும் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மமக செயலார் பரக்கத் அலி கூறுகையில், ‘தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வார்டிலும் மக்கள் தொகையை பொருத்து வாக்காளர்கள் எண்ணிக்கை இருந்தது. இதை சீர்படுத்தும் நோக்கில் தேர்தல் ஆனையம் அனைத்து வார்டிலும் சரியான எண்ணிக்கையில் வாக்காளர்கள் வருமாறு செய்வதாக எண்ணி குளறுபடியையும் குழப்பத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளனர்.கணவன் ஒரு வார்டு, மனைவி ஒருவார்டு, வசிப்பது ஒரு வார்டு, வாக்கு இருப்பது ஒருவார்டு என பெரும் குளப்படி உள்ளது. இதை சரி செய்ய மீண்டும் மறுபரிசீலனை செய்து வாக்காளர் படடியல் வெளியிட வேண்டும்’ என்றார்.

Tags : Voters ,
× RELATED தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள்...