×

நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

கூடலூர், அக். 24: நீர்பிடிப்பு பகுதியில் மழைகுறைந்ததால் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது.  முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் வேகம்  நேற்று முதல் குறைந்தது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு 3199 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1828 கன அடியாக குறைந்துள்ளது. ஆனால், அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1360 கனஅடியிலிருந்து 1530 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 127 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1828 கனஅடியாகவும், அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1530 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 4039 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகையின் நீர்மட்டம் 63.02 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2361 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 1190 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 4207 மில்லியன் கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.60 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 222 கன அடியாக உள்ளது.  அணையிலிருந்து நீர் வெளியேற்றம் இல்லை. அணையின் இருப்புநீர் 4207 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.64 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 187 கனஅடியாகவும்,  அணையிலிருந்து வினாடிக்கு 187 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 100.61 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழையளவு: பெரியாறு 5 மி.மீ, தேக்கடி 7.2 மி.மீ. கூடலூர் 3.5 மி.மீ, உத்தமபாளையம் 4 மி.மீ, வைகை 0.4 மி.மீ, சோத்துப்பாறை 6 மி.மீ, மழை பதிவாகி இருந்தது.

Tags : catchment area ,Periyar Dam ,
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு