×

நீர்பிடிப்பு பகுதியில் மழை மஞ்சளாறு அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரெய்டு

உத்தமபாளையம், அக்.24: உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு நடந்தபோது பொதுமக்களை சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். உத்தமபாளையம் சப்-கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டில் உத்தமபாளையம், போடி தாலுகா அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் தினந்தோறும் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், மக்கள் குறைகள் குறித்த மனுக்கள், வீட்டு மனை பட்டாவேண்டியும், ஆதரவற்றோர் விதவை சான்றிதழ் வேண்டி கோரிக்கை மனுக்களை தருவதற்கு வருவார்கள். சப்-கலெக்டர் அலுவலகத்தின் கீழ்புறம்தான் மோட்டார் வாகன ஆய்வாளர்(பகுதி), அலுவலகம் செயல்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் ஒன்றரை மணியில் இருந்து பொதுமக்கள் யாரையும் விஜிலென்ஸ் போலீசார் மேல்புறம் செயல்படும் சப்-கலெக்டர் அலுவலகத்திற்குள் விடாமல் கெடுபிடி காட்டினர். இதனால் போடி, சின்னமனூர், வெண்ணியாறு, கூடலூர் உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து வந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 40 கி.மீ  வரை பயணித்தும் அனுமதிக்காத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
எப்போதுமே விஜிலென்ஸ் ரெய்டு நடந்தால், மேல்புறம் செயல்படக்கூடிய சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறைதான் போலீசார் கடுமையான கெடுபிடியை காட்டினர். இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உத்தமபாளையம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்குள் கோரிக்கை மனுக்கள் மற்றும் ஏற்கனவே தந்த மனுக்கள் மீதான விசாரணை மற்றும் பல்வேறு தகவல்களுக்காக சென்றோம். ஆனால், விஜிலென்ஸ் ரெய்டு நடக்கிறது என கூறி போலீசார் விரட்டியடித்தனர்’’ என்றனர்.

Tags : rainforest area ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?