பரமக்குடியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

பரமக்குடி, அக். 24: சோமநாதபுரம் சௌராஸ்ட்டிரா தேசிய நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பரமக்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஷைனி செராபுதீன் தலைமையில் நடைபெற்ற இம் முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காந்தி வரவேற்றார். முகாமில் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது பற்றியும், நல்ல தண்ணீரில் கொசுக்கள் முட்டையிட்டு புழுவாக மாறி மீண்டும் கொசுவாக. மாறுவதை தடுக்க தண்ணீர் பானைகள், தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை மூடி வைத்தும், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் சேகரித்து வைத்திருக்கும் பானைகள், சிமென்ட் தொட்டிகள் போன்றவற்றை சுத்தமாக கழுவி, பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவி சுத்தம் செய்து கொசுக்களை ஒழிக்கும் விதம் பற்றியும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனே அரசு மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெறுதல் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.மேலும் மாணவ, மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.நிழ்ச்சியில் பாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் நர்மதா, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக சோமநாதபுரத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுப்பழு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களால் தெருக்களை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. நீர் நிலைகளில் குளோரினேசன் செய்ப்பட்டது.

Related Stories:

>