×

ஊராட்சி உதவி இயக்குனர் ஆய்வு

சாயல்குடி, அக். 24: கடலாடி அருகே எஸ்.டி. சேதுராஜபுரத்தில் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன் நேற்று ஆய்வு செய்தார்.கடலாடி ஒன்றியம் எஸ்.தரைக்குடி பஞ்சாயத்தில் உள்ள எஸ்.டி.சேதுராஜபுரத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான மயானம் ஊரணி கரையோரத்தில் உள்ளது. ஊரணி கரை வழியாக இறந்தவர் உடலை கொண்டுச் செல்லும்போது மயான பாதைக்கு சாலை வசதியின்றி அவதிப்பட்டு வருகிறோம். மழைக்காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இரவு நேரங்களில் மயானத்திற்கு  தெருவிளக்கு வசதியில்லை. இதனை போன்று ரேசன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லை என கலெக்டர் வீரராகவராவிடம் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து ஊரணிக்கரை பாதை, மயானம், ரேசன்கடைக்கு இடம் ஆகியவற்றை  ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன் ஆய்வு செய்தார்.பிறகு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மயானத்திற்கு புதிய சாலை வசதி, மின்சாரவாரிய அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டுச்சென்று புதிய மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு அமைக்க பரிந்துரை செய்தார். ஆய்வின்போது ஆணையாளர் அன்புக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) மேகலா, உதவி பொறியாளர்கள் சீனிவாசன், சுபாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Inspection ,Panchayat Assistant Director ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...