×

தீபாவளி இனாம் கேட்பது போல் தனியார் நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம் கொள்ளை

மதுரை, அக்.24: மதுரையில் தீபாவளி இனாம் கேட்பது போல் நடித்து தனியார் நிறுவனத்தில் இருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கத்தை ெகாள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் முருகேசன்(52). இவர் கீழமாரட் வீதியில் வெங்காய கொள்முதல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கடையில் வசூலான பணத்தை முருகேசன் எண்ணி கொண்டிருந்தார். அங்கு சுமார் 40 வயது மதிக்கதக்க மர்மநபர் ஒருவர் வந்தார். தீபாவளி இனாம் தரும்படி முருகேசனிடம் கூறினார். தொடர்ந்து கடையிலிருந்த ஒரு பொருளை மர்ம நபர் கீழே தட்டிவிட்டார். முருகேசன் அந்த பொருளை குனிந்து எடுக்க முயன்றபோது, அங்குள்ள டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த வசூல் பணம் ரூ.2.50 லட்சம் ரொக்க பணத்தை எடுத்து கொண்டு மர்மநபர் தப்பியோடினார். இதுதொடர்பாக  விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : company ,Diwali Inam ,
× RELATED திருப்பூரில் பனியன் கம்பெனியை...