×

பணியிடத்தில் விஏஓக்கள் இருக்க உத்தரவு

திருமங்கலம், அக்.24: கண்மாயை கண்காணிக்க விஏஓக்கள், தலையாரிகள் தங்களது அலுவலகத்தில் இருக்கவேண்டும் என ஆர்டிஒ உத்தரவிட்டுள்ளார். கள்ளிக்குடி தாலுகா அலுவலகத்தில் நேற்று அனைத்து அரசுதுறை அலுவலர்களின் கூட்டம் திருமங்கலம் ஆர்டிஓ முருகேசன் தலைமையில் நடந்தது. பருவ மழைகாலங்களில் மழை, வெள்ளங்களில் எப்படி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்த நடந்த கூட்டத்தில் ஆர்டிஓ பேசுகையில், தற்போது மழை காலமாக இருப்பதால் கண்மாய்கள், குளங்களை அதிகாரிகள் கண்காணித்து வரவேண்டும். குறிப்பாக விஏஓகள், தலையாரிகள் தங்களது தலைமையிடங்களில் இருந்து நிலமைகளை கண்காணித்து வரவேண்டும்.

தண்ணீர் புகும் இடங்களில் அனைத்து துறையினரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். திருமண மண்டபங்கள், சாவடிகளை தயார் நிலையத்தில் வைத்து கொள்ளவேண்டும். அவசர காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்களை அங்கு தங்க வைக்க வேண்டும். நிலமைகள் குறித்து தகவல்களை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தவேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் வருவாய், பொதுபணித்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருமங்கலம் அருகேயுள்ள நேசனேரி அய்யனார், எல்லையம்மன் கோயிலில் பூஜைபெட்டி எடுப்பது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்னை குறித்து ஆர்டிஓ தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் 64 பங்காளிகள் கலந்து கொண்டனர். பூஜைபெட்டி விவகாரத்தில் பழைய நடைமுறை அதாவது இரண்டு பெட்டிகள் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. புதிதாக பெட்டி வைக்கவேண்டும் எனில், அனைத்து பங்காளிகளும் ஒன்று சேர்ந்து முடிவு எடுக்கவேண்டும். இனி வருங்காலங்களில் விழா நடத்த வருவாய் மற்றும் போலீசாரின் முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

Tags : VAOs ,workplace ,
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...