×

போலீஸ் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

உசிலம்பட்டி, அக். 24: உசிலம்பட்டி காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட டி.ஐ.ஜி.ஆனிவிஜயா ஆய்வு மேற்கொண்டார். அவர், அங்குள்ள ஆவணங்களின் கோப்புகளை ஆய்வு செய்தார். பின்பு காவல்நிலையம் சுற்றுப்புறங்களில் மரங்கன்றுகளை நட்டு பராமரிக்க அதிகாரிகளை கேட்டு கொண்டார். உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜா, பேரையூர் டி.எஸ்.பி.மதியழகன், இன்ஸ்பெக்டர்கள் உசிலம்பட்டி சார்லஸ், பேரையூர் துரைப்பாண்டியன், உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : DIG inspection ,police station ,
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது