×

குழாய் பதிப்பதற்காக தோண்டியதை மூடுவது எப்போது? தேவர் ஜெயந்தி விழா ஆலோசனைக் கூட்டம்

அருப்புக்கோட்டை, அக். 24: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வருகிற அக்.30ம் தேதி தேவர் ஜெயந்தி நடைபெற உள்ளது. இதையொட்டி, அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில், தேவர் ஜெயந்தி விழாவில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. இதில் எஸ்ஐக்கள் திருமலைராஜன், சீனிவாசன், திருமலைக்குமார் மற்றும் தேவர்ஜெயந்தி விழாவிற்கு செல்வோர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ‘தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள செல்பவர்கள் வாடகை வாகனத்தில் செல்லக்கூடாது. சொந்த வாகனத்தில் சென்றாலும் வாகனத்தின் உரிமையாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். போலீசார் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும்தான் செல்ல வேண்டும். விழாவிற்கு செல்பவர்கள் மற்ற சமுதாயத்தினரை புண்படுத்தும் வகையில் சாதி ரீதியிலான பாடல்களோ, கோஷங்களோ எழுப்பக்கூடாது. திறந்தவெளி வாகனங்களில் செல்லக்கூடாது.  டிஜிட்டல் பேனர், பிளக்ஸ் போர்டு, கட்அவுட் வைக்க அனுமதியில்லை. ஜோதி, முளைப்பாரி, பால்குடம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாகன முன் அனுமதி பெறப்படாத வாகனங்களுக்கு அனுமதியில்லை. போக்குவரத்து விதிமுறைகளை கருத்தில் கொண்டு வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மற்றும் பேனர்கள் கட்டக்கூடாது. பாதுகாப்பு கருதி வாகனத்தின் மேல்புறத்தில் கண்டிப்பாக அமர்ந்து பயணம் செய்யக்கூடாது. இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Tags : Thevar Jayanti Festival Advisory Meeting ,
× RELATED கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு!: அகரத்தில் 5...