×

தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வலியுறுத்தல் ரயில்வே தனியார்மயத்தை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், அக். 24: ரயில்வே தனியார்மயத்தை கண்டித்து, விருதுநகர் ரயில்வே நிலையம் முன்பாக, ரயில்வே தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் கிளை செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘50 ரயில் நிலையங்களையும், லாபத்தில் இயங்கும் 150 விரைவு ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக, ‘அமிதாப்காந்த்’ தலைமையிலான கமிட்டி அக்.10 வெளியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

தனியாரிடம் ரயில்வேயை ஒப்படைக்கும் தீயநோக்கில் 33 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 30 ஆண்டு சர்வீஸ் முடித்த ஊழியர்களை திறமையற்றவர்கள் என பழி சுமத்தி வீட்டுக்கு அனுப்பும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். பணிமனைகளை ஐஆர்ஆர்எஸ்சி என்ற கார்ப்ரேஷனின் கீழ் கொண்டு வந்து பன்னாட்டு, தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் எண்ணத்தை கைவிட வேண்டும். இந்திய ரயில்வேயை விற்க அனுமதிக்க மாட்டோம். மக்கள் சொத்தை விற்க அனுமதிக்க மாட்டோம்’ என கோஷங்களை எழுப்பினர்.

Tags : Railway workers ,
× RELATED ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை...