×

மண் பரிசோதனையோடு நிற்கும் திட்டம் ரயில் வரும் நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதி வத்திராயிருப்பில் புதர்மண்டிக் கிடக்கும் சின்ன ஊருணி

வத்திராயிருப்பு, அக். 24: வத்திராயிருப்பில் புதர்மண்டிக் கிடக்கும் சின்ன ஊருணியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு நகரின் குடிநீர் ஆதாரமாக பெரிய ஊருணி, சின்ன ஊருணி உள்ளது. இதில், பெரிய ஊருணி வெட்டுக் கிடங்குகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. பெரிய ஊருணி மற்றும் சின்ன ஊருணிக்கு, பெரியகுளம் கண்மாயில் இருந்து வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் வரும். மழை காலங்களில் வயல்களில் தேங்கும் தண்ணீர் ஊருணிகளுக்கு வரும்.

இதனிடையே, சின்ன ஊருணி நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாததாலும், தொடர் மழை இல்லாததாலும் ஊருணி வறண்டு கிடக்கிறது. இதனால், ஊருணியில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. ஊருணியின் மையப்பகுதியில் 6 அடி ஆழத்திற்கு மேல் மண் தோண்டியுள்ளனர். கரைகளும் பலமில்லாமல் உள்ளது. கனமழை காலங்களில் ஊருணியில் தண்ணீர் நிறைந்தால், கரை உடைப்பு ஏற்பட்டு, வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியில் உளள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இந்த ஊருணியில் தண்ணீர் தேங்கினால், வத்திராயிருப்பில் வீடுகளில் உள்ள போர்வெல்களில் நீர்மட்டம் உயரும். எனவே, சின்ன ஊருணி கரையை பலப்படுத்தி, வரத்துக் கால்வாய்கள் மற்றும் ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...