×

கால்பந்து போட்டியில் கிருஷ்ணகிரி அணி வெற்றி

திண்டுக்கல், அக்.24: திண்டுக்கல்லில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கிருஷ்ணகிரி எஸ்டிஏடி ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்கமும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகமும் இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து, கையுந்து பந்து, பூப்பந்து, சதுரங்கம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதி கால்பந்து போட்டியில் கிருஷ்ணகிரி எஸ்டிஏடி ஸ்போர்ட்ஸ் அணி, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி பள்ளி அணி மோதின. இதில் 4-1 என்ற கோல் கணக்கில் எஸ்டிஏடி அணி வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற எஸ்டிஏடி அணிக்கு எஸ்கேசி டிராபி மற்றும் ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாமிடம் பிடித்த புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணிக்கு குமரேசன் டிராபி மற்றும் ரூ.7,500 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

Tags : Krishnagiri ,team ,football match ,
× RELATED கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலைக்...