×

ஆத்தூரில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மேலாண் இயக்குநர் ஆய்வு வெட்டி சாய்க்கப்படும் தென்னை மரங்கள்

திண்டுக்கல், அக்.24: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைத்தல் கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்தியகோபால் ஆய்வு செய்தார். குடிமராமத்து திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 2019-2020ம் நிதியாண்டில் 114 பணிகள் ரூ.47.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் அடிப்படையில் ஆத்தூர் வட்டம், ஆத்தூர் அணைக்கட்டு வரத்துக்கால்வாயில் 90 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர், சொக்குபிள்ளை ஓடையில் 20 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் ஆகியவை ரூ.77.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. இக்கால்வாயின் மூலம் 800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இக்கால்வாய் மூலம் கருங்குளம், பகடைகுளம், புல்வெட்டிக்குளம் ஆகிய குளங்கள் நீர் நிரம்பி அதற்குட்பட்ட விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆத்தூர் வட்டத்தில் குடிமராமத்து  திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி  முன்னிலையில், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள்  சீரமைத்தல் கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்தியகோபால்,   ஆய்வு  செய்தார். புல்வெட்டிக்குளத்தில் குடிமராமத்துத் திட்டப்பணிகளை ஆய்வு செய்த சத்தியகோபால், இப்பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், விவசாயிகள் குளத்தில் அதிகளவில் நீரினை தேக்கி வைத்து தங்கள் பகுதியின் நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என தெரிவித்தார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் ஆனந்தன், உதவிப் பொறியாளர் தங்கவேல் மற்றும் விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags : Managing Director inspection ,Athur ,
× RELATED ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி...