×

பட்டிவீரன்பட்டியில் களைகட்டிய கூடைப்பந்து போட்டி

பட்டிவீரன்பட்டி, அக்.24: பட்டிவீரன்பட்டியில் நடந்த மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் திண்டுக்கல் அணிகள் அசத்தின. பட்டிவீரன்பட்டியில் திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. திண்டுக்கல், சின்னாளபட்டி, பழநி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, வடமதுரை, கொடைக்கானல் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 6 பிரிவாக நடத்தப்பட்ட இப்போட்டியில் 48 அணிகள் பங்கேற்றன.14 வயதுக்குட்பட்டோருக்கான மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அணியும், வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி அணியும் மோதின.

இதில் திண்டுக்கல் எம்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்றது. இதே பிரிவில் மாணவிகளுக்கான இறுதிப் போட்டியில் திண்டுக்கல் செயின்ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணியும், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. இதில் திண்டுக்கல் செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. 17 வயதுக்குட்பட்டோருக்கான மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அணியும், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. இதில் திண்டுக்கல் எம்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்றது. இதே பிரிவில் மாணவிகளுக்கான இறுதிப் போட்டியில் திண்டுக்கல் செயின்ட்ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. இதில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. 19 வயதுக்குட்பட்டோருக்கான மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அணியும், வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி அணியும் மோதின.

இதில் திண்டுக்கல் எம்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்றது. இதே பிரிவில் மாணவிகளுக்கான இறுதிப் போட்டியில் திண்டுக்கல் செயின்ட்ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. இதில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. முதலிடம் பிடித்த அணிகள் மாநில அளவில் நடைபெற உள்ள கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றுள்ளன.
முன்னதாக நேற்று நடைபெற்ற மாணவிகளுக்கான கூடைபந்தாட்ட இறுதிப்போட்டியை பட்டிவீரன்பட்டி இந்து நாடார்கள் பரிபாலன சங்க தலைவர் ராஜாராம் துவக்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், பள்ளி செயலர்கள் பிரசன்னா, வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர் தினேஸ் மற்றும் பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Weed Basketball Tournament ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்