ஓய்வூதியர்களுக்கும் உடனடியாக அகவிலைப்படி அறிவிக்க வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

திருச்சி, அக்.24: அனைத்துத்துறை அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட கூட்டம் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சங்கத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கதிரவன், நவ.19ல் சென்னையில் நடைபெற உள்ள அரைநாள் தர்ணா குறித்தும், மாநிலத் தலைவர் புருஷோத்தமன் சேலம் மாநாடு தீர்மானம் குறித்தும் பேசினர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை நடந்தது. மூத்த உறுப்பினர்கள் டாக்டர்கள் இந்துவதனி, மகேந்திரன் மருத்துவர்களை கவுரவித்தனர். கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு அறிவித்த 5 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். வருங்காலங்களில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் நாளிலேயே ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக துணைத்தலைவர் குருநாதன் வரவேற்றார். இணைச் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Related Stories:

>